(மன்னார் நிருபர்)
(30-11-2023)
மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா திருப்பலி இன்று (8) வெள்ளிக்கிழமை காலை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.
பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா கடந்த புதன்கிழமை (29) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.நேற்று (7) வியாழக்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனையும்,இன்று வெள்ளிக்கிழமை (8) காலை திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளாரின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பணியும்,அதனைத்தொடர்ந்து ஆசியும் மன்னார் மறைமாவட்ட ஆயரினால் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதன் போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.