யோர்க் பிராந்தியத்தில் வாகனத் திருட்டை எதிர்த்துப் போராட $900,000 முதலீடு செய்கிறது. காவல்துறைக்கு உதவும் வகையில், ஒன்ராறியோ அரசாங்கம், யோர்க் பிராந்தியத்தில் வாகன திருட்டை எதிர்த்துப் போராடுவதற்கு 900,000 டாலர்களை முதலீடு செய்துள்ளது.
இதற்கான அவசியம் என்ன என்பதை விளக்கி மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
– யோர்க் பிராந்தியத்தில்,
o 2019 ஆம் ஆண்டிலிருந்து வாகனத் திருட்டு 200% அதிகரித்துள்ளது.
o 2023 இல் 3,300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறை பதிவு செய்துள்ளது.
o சுமார் 90% திருட்டுகள், பிராந்தியத்தின் தெற்குப் பகுதியில் நடந்துள்ளன.
– ஒன்ராறியோ மாகாணம்
o 2014 முதல் 2021 வரை, மாகாணம் முழுவதும் வாகனத் திருட்டு 72% அதிகரித்துள்ளது.
o கடந்த ஆண்டில் மட்டும் 14% அதிகரித்துள்ளது.
“Markham-Thornhill ஐப் பாதுகாக்கும் முயற்சியில், கார் திருட்டை எதிர்த்து ஒன்ராறியோவின் $18 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஒரு பகுதியாக யோர்க் பிராந்திய காவல்துறைக்கான சமீபத்திய நிதியுதவி வழங்குகிறது. இந்த வலுவான முன்முயற்சி, சிறப்பு குழுக்கள் மற்றும் , ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகளை அகற்றுவதற்கும் சமூக பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் மன அமைதியை வழங்குவதற்கும் எங்கள் வலுவான உறுதிப்பாட்டை வழங்குகின்றது.” என்று மாகாண பாராளுமன்ற உறுப்பினர் திரு லோகன் கணபதி கூறினார்.
உங்கள் பாதுகாப்பு எமது ஒன்றாரியோ அரசாங்கத்தின் முக்கிய நோக்கம், மேலும் எங்கள் சமூகத்தில் வாகனத் திருட்டை எதிர்த்து நடவடிக்கை எடுப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த முயற்சியின் முதலீடு மார்க்கம்-தோர்ன்ஹில் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பின் ஒரு முயற்சி.என்றும் நான் அறியத்தருகின்றேன்.
இவ்வாறு மாகாண பாராளுமன்றத்தின் மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியின் உறுப்பினர் லோகன் கணபதி ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.