புத்தூர் சந்தியில் வாளுடன் நின்ற ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன், 12-12-2023 அன்று காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் திருட்டுச் சம்பவம் தொடர்பான தேடுதல் நடவடிக்கைக்காக சென்றுகொண்டிருந்தவேளை குறித்த சந்தேகநபர் புத்தூர் சந்தியில் வாளுடன் நின்றுள்ளார். இதன்போது பொலிஸார் அவரை கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.