”ஓற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குவதற்கு உலகத்தமிழ் பேரவை மூலம் கூட்டமைப்பினர் முயற்சி — அதனை நாங்கள் தோற்கடிப்போம்” என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி
(கனகராசா சரவணன் )
இன்று மக்களால் அங்கீகரிக்கப்படாதவரும் மக்கள் செல்வாக்கும் இல்லாதவருமான ஒரு ஜனாதிபதி ஏதோ ஒரு வகையில் தான் அடுத்த தேர்தலில் வெல்வதற்காக இனவாதத்தை கையில் எடுத்து உரிமைக்காக போராடுகின்ற எம்மவர்களை கடுமையாக அச்சுறுத்தி தன்னுடைய மக்கள் மத்தியில் சிங்கள பௌத்த தன்மையைக் காட்டி தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டால் சிங்கள பௌத்தர்கள் தங்களுக்கு வாக்கு போடுவார்கள் என்ற பேர்வையில் மட்டக்களப்பில் எமது அமைப்பாளர் உட்பட 10 பேரை கைது செய்து செயற்படுகின்ற பல விடையங்களை அதனுடைய ஓர் அங்கமாக பார்க்கின்றோம்.13 வது திருத்தத்தில் ஓற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குவதற்கு ஏக்கே ராஜ்சிய என்ற அரசியல் அமைப்பை சம்மந்தன் சுமந்திரன் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரித்து 2015 திணிக்க முற்பட்டு முடியாமல் போனதை கூட்டமைப்பின் ஒரு பங்காளி முகவர்களான உலகத் தமிழர் பேரவை மூலம் அரசே செய்யமுடியாத ஒரு காரியத்தை அவர்கள் செய்ய முயற்சிக்கின்றார்கள்; அதனை நாங்கள் தோற்கடிப்போம் என நாடாளமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சூழுரைத்துள்ளார்.
மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் அவரது மகன் ஆகியோரை இன்று வியாழக்கிழமை (14) சிறைச்சாலைக்கு நாடாளமன்ற உறுப்பினர்களான பொ.கஜேந்திரகுமார். எஸ்.கஜேந்திரன் கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் ஆகியோர் சென்று பார்வையிட்ட பின்னர் பொ. கஜேந்திரகுமார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ”மாவீரர் நினைவேந்தலில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு அமைப்பாளர் அவரது மகனையும் ஒரு அரசியல் பழிவாங்கலுக்காக சட்டவிரோதமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
அவர் நினைவு கூறுவதற்கு என சென்று பொலிசார்; அதனை மறுத்தபோது திரும்பிய நிலையில் வாகனத்தில் சிவப்பு மஞ்சல் கொடிகள் கொண்டு சென்றதற்காக கைது செய்யப்பட்ட கூலிக்கு வந்த சாரதியும் வாகனத்தையும் கொண்டு செல்லுகின்றனர் என்ற காரணத்திற்காக அவருடன் பொலிஸ் நிலையத்துக்கு சென்றது மட்டும்தான் அமைப்பாளர் செய்த தவறு அவரை பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
வழக்குசார்ந்த விடையங்கள் தொடர்பாக மட்டு சிறைச்சாலையில் அவரை சந்தித்தோம் அவரின் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது அவர் ஒரு சர்க்கரை வியாதி உடையவர் காலில் காயம் ஏற்பட்டதால் கால்வீங்கி சரியான வேதனையில் இருக்கின்றாh அவரை வைத்தியசாலை கொண்டு செல்லவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பொறுப்பதிகாரி தெரிவித்தார் இதனை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பதில் அவருக்கு நீதிகிடைக்கும் என்ற நம்பி;கை இருக்கின்றது.
இனவாதத்தை காட்டிவந்து சிங்கள மக்களுடைய வாக்குகளை பெறலாம் என எதிர்பார்க்கின்றார். ஆனால் பௌத்த மக்களுக்கு எந்தளவு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றார் என்பது அவரின் நாடகங்களை தாண்டி அந்த மக்கள் விளங்கி கொள்வார்கள் விசேடமாக இந்த வற் வரி அதிகரிப்பு சாதாரண நடுத்தரவர்க்கம் ஏழை மக்களுக்கு குறிவைக்கப்பட்டுள்ளது
ஆனால் நாட்டை அழித்த நேரடியாக வந்து கொள்ளையடித்து அரசு தரப்பின் செல்வாக்கை பயன்படுத்தி கோடிக்கணக்கில் இலாபம் தேடின தரப்புக்கள் இன்று எந்த விதத்திலும் வற்வரியில் பாதிக்கப்படபோவதில்லை கொள்ளையடி த்தவர்களுக்கு எதிராக இது வரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை அதுமட்டுமல்ல கொள்ளையடித்தவர்கள் இன்று ஆட்சி பீடத்தில் ஓன்றாகியுள்ளனர்.
இந்தவகையில் இந்த நாட்டை கொள்கை ரீதியாக வந்து பொருளாதார ரீதியாக எந்தவிதமான அறிவும் இல்லாமல் நிபுணர்த்துவம் இல்லாதவர்கள் முடிவுகள் எடு;த்து தங்களுடைய நெருங்கிய நண்பர்கள் உதவியாளர்கள் கொள்ளையடித்து கறுப்பு பணத்தை சேகரிப்பவர்கள் உடன் செயற்படுவதால் நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது
ஒரு அறிவும் இல்லாதவர்கள் ஆட்சி பீடத்தில் வந்து அவர்கள் எடுத்து முடிவின் காரணமாக சாதாரண பொதுமக்கள் இன்று முற்று முழுதாக அந்த பழிக்கு தள்ளப்பட்டுள்ளனர் ஆனால் அந்த பாரிய தவறை விளங்கி கொள்ளாமல் ஜனாதிபதி அவர் படிப்பில் ஒரு சட்டத்தரணி அவருக்கு பொருளாதாரம் சம்மந்தமாக நிபுணத்துவ அறிவு கிடையாது
கோட்டாபாய ஒரு அறிவும் இல்லாது பிழையான முடிவுகளை எடுத்த போது இருந்தவர்கள் இப்போது ஜனாதிபதியை சுற்றிவர ஆலோசனை வழங்குகின்றவர்கள் ஆகவே இப்படிப்பட்ட நபர்கள் தொடர்ந்தும் எடுக்கின்ற முடிவுகளால் கொள்ளையடித்தவர்கள் பாதுகாக்கப்படுகின்றனா.
உண்மையில் கொள்ளையடித்தவர்கள் வெளிநாடுகளில் வைத்திருக்கின்ற பணத்தை நாட்டுக்கு கொண்டுவந்து பொருளாதார நெருக்கடிக்கான எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது இந்த நாடு வீழ்வதற்கு சம்மந்தப்படாத நாட்டுக்கு நேர்மையாக உழைத்தவர்களுக்கு தான் வரி சுமையை செலுத்தப்படுகின்றது
ஒரு அரசியல் பழிவாங்கலுக்காக அரசை கடுமையாக நாங்கள் விமர்சிப்பதால் எமது அமைப்பாளர் மற்றும் எமது உறுப்பினர்கள் மீது பழிவாங்கல் செயற்பாட்டில் செயற்படுகின்ற அதே தரப்பு அறிவில்லாத காரணத்தினால் இன்று சிங்கள மக்களுடைய வாழ்க்கையில் அடிக்கின்ற நிலமை இருக்கினறது ஆகவே இந்த நாடகங்கள் நடித்து படு மோசமான மக்கள் விரோத செயற்பாடுகளை செய்யமுடியாது ஒரு நிலமை நிச்சயமாக உருவாகும் அதனை மக்கள் உணர்ந்து செய்யவேண்டிய பொறுப்பை சரியான கோணத்தில் எதிர்ப்பை தெரிவிப்பதன் மூலம் தடுத்து நிறுத்துவார்கள்.
சம்பந்தன் சுமந்திரன் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு 13 திருத்தத்தில் ஓற்றையாட்சிக்குள் வந்து தமிழ் அரசியலை முடக்குவதற்கு 2015 ஏக்கே ராஜ்சிய என்ற அரசியல் அமைப்பை தயாரித்து திணிக்க வெளிக்கிட்டபோது நாங்கள்; யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் பாரிய மக்களை திரட்டி எதிர்ப்பு போராட்டதை நடாத்தியதுடன் தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கி மக்கள் அணிதிரண்டு அதை தோற்கடித்தோம்.
அதேபோன்று தமிழரகட்சியின் ஒரு பங்காளி முகவர்களாக செயற்பட்டுக் கொண்டிருக்க கூடிய புலம் பெயர்ந்த மக்களாலும் அங்கிருக்கும் ஏனைய அமைப்புக்களால் நிராகரிக்கப்படுகின்ற ஒரு சில உதிரிகளை வைத்து இயங்குகின்ற உலகத் தமிழர் பேரவை. இப்போது ஈழத்தமிழர்களை குறிவைக்கின்றது
எனவே தமிழ் தேசியத்தில் ஊறி இருக்க கூடிய தமிழ் தேசியத்துக்காக எத்தனையே தியாகங்களை செய்திருக்க கூடிய வடகிழக்கில் வாழுகின்ற ஈழதமிழர்கள் இதற்கு கடைசிவரைக்கும் இடம்கொடுக்க மாட்டார்கள். ஆனாலும் அப்படிப்பட்ட ஒரு முயற்சியை எடுப்பதற்கும் இப்படிப்பட்ட துரோக செயற்பாடுகளை செய்வதற்கும் ஆட்கள் இருக்கின்றனர்; அவர்களையும் அவர்களுடன் பயணிக்கின்றவர்களையும் இனம்கண்டு ஒட்டு மொத்தமாக இந்த அரசியலில் இருந்து ஓரம்கட்டவேண்டு” என்றார்.