வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் 19 ஆவது சுனாமி நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது
கட்டைக்காடு கடற்றொழிளாளர் கூட்டுறவு சங்க தலைவர் செ.செபஸ்ரியன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் அருட்தந்தை அமல்ராஜ், மற்றும் முள்ளியான் கிராம சேவையாளர் கி.சுபகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈகைக்சுடரினை உயிரிழந்த உறவுகளின் உறவினர் ஒருவர் ஏற்றிவைக்க நினைவுத் தூபிக்கான மலர் மாலையும் அணிவிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தங்களது உறவுகளை இழந்த நூற்றுக்கணக்கான உறவுகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்