திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பிரதேசங்களில் விடுமுறையில் சென்றுள்ள முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்தவர்களை மீள் அறிவித்தல் வரை சேவைகளுக்கு திரும்ப வேண்டாமென இராணுவ ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள சகல முன்பள்ளிகள், அரச பாடசாலைகள் மற்றும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
திவுலபிடிய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,395 ஆக அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமாகும்.
இந்நிலையில், திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.