நாடாளுமன்றத்துக்கு கடந்த தடவை போல 7 கட்டங்களாக தேர்தல் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அட்டவணை அடுத்த மாதம் இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கு நடத்தப்படும் தேர்தல் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி தொடங்கலாம் என்று மதியம் தகவல்கள் வெளியானது. டில்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், “ஏப்ரல் 16-ந்தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் சார்ந்த பணிகளை வகுக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
![ஏப்ரல் 16-ல் நாடாளுமன்ற தேர்தல்?](https://uthayannews.ca/wp-content/uploads/2023/11/election-300x172-1.jpg)