மீன்பிடிக்கச் சென்ற போது படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த இந்திய மீனவரின் சடலம், இன்று கடற்படையினரின் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தங்கச்சிமடம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 வயதுடைய அந்தோணி டிவாட்டன் ஹர்சன் என்ற இளைஞன், கடலில் தவறி விழுந்து காணாமல் போயிருந்தார்.
அவரது சடலம், அல்லைப்பிட்டி கடற்பகுதியில், ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியது. இளைஞனின் சடலத்தைப் பொறுப்பேற்ற இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், இலங்கை கடற்படையின் உதவியுடன், சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
இன்று காலை சர்வதேச கடற்பரப்பில் இந்தியக் கடலோர காவல்படையிடம் கடற்படையினரால் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.