ரொறன்ரோவில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிய வண்ணம் தாயகத்திலும் தமிழகத்திலும் மனித நேயப் பணிகளை மேற்கொண்டுவரும் ‘ரொறன்ரோவின் மனித நேயக் குரல்’ (TORONTO VOICE OF HUMANITY) அமைப்பின் சார்பில் வவுனியாவில் அலுவலகத்தை அமைத்து கடந்த பல வருடங்களாக கண்ணீரும் கம்பலையுமான தமது உறவுகளைத் தேடி குரல் எழுப்பி வரும் ‘காணாமல் ஆக்கப்பட்டோரின் அன்னையருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு 23-01-2024 அன்று நடைபெற்றது.
வவுனியாவில் இயங்கிவரும் இந்த அமைப்பின் செயலாளர் திரு ராஜ்குமார் தலைமையில் முன்னெடுக்கப்பெற்ற இந்த நிகழ்வில் 80 அன்னையருக்கு தலா 2500 ரூபாய்கள் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் கையளிக்கப்பெற்றன.
அந்த இடத்தில் ரொறன்ரோ மனித நேயக்குரல் அமைப்பினருக்கும் நன்றி தெரிவிக்கப்பெற்றது