கனடாவின் வோன் மாநகர சபை நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்’
கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள வோன் மாநகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் பல்வேறு வகையான பங்களிப்புக்களும் சாதனைகளும் அந்த நகரத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காக விளங்குகின்றன.
இதைக் கருத்திற் கொண்டு மேற்படி மாநகர சபையும் அதன் நகரபிதாவும் மற்றும் அங்கத்தவர்களும் எமது தமிழ் மக்களின் கலை மற்றும் கலாச்சாரப் பண்புகளை மதிக்கும் வகையில் இந்த ‘தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டத்தை கடந்த சில வருடங்களாக நடத்தி வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற மேற்படி விழாவில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து சிறப்பித்தனர். மேற்படி விழாவை நடத்தவென நியமிக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் அன்பர்கள் துணையாக இருக்க விழா சிறப்பாக நடைபெற்றது
பரத நாட்டியம் மற்றும் கர்நாடக இசைப்பாடல்கள் ஆகியனவும் இடம்பெற்றது. மாநகர பிதா மற்றும் கவுன்சிலர்கள் சிலர் அங்கு வாழ்த்துரைகள் வழங்கினார்கள்.