பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு பகுதியில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந் பெண் ஒருவர் 10 லிட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.