காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். மேற்கு வங்காள மாநிலத்தில் அவரது நடைபயணம் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி மேற்கு வங்காள மாநிலத்தின் கதிஹார் என்ற இடத்தில் நடைபயணம் மேற்கொண்டபோது அவரது கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கல்வீச்சில் கார் கண்ணாடி சேதம் அடைந்தது. லேசான தாக்குதல் சம்பவம் என்பதால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில் “கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தியிருக்கலாம். காவல்துறையினர் இந்த சம்பவத்தை புறக்கணித்துள்ளனர். போலீசாரின் புறக்கணிப்பால் ஏராளமான விசயங்கள் நடந்திருக்கலாம். இது சிறு சம்பவம்தான்” என்றார்