ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் மற்றும் அமைச்சர்கள் மற்றும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உத்தியோகப்பூர்வமாக ஒ ஸ்காபுறோ நகரில் நடத்திவரும் S & B Pallets Ltd, தொழிற்சாலைக்கு விஜயம் செய்தனர்
30-01-2024 செவ்வாய்க்கிழமை கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் கௌரவ டக் போர்ட் அவர்களும் மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்களான ரேமண்ட் சோ மற்றும் விஜய் தணிகாசலம் மற்றும் மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரிஸ் பாபிகியன் மற்றும் டேவிட் ஸ்மித் ஆகியோர் உத்தியோகப்பூர்வமாக ஒன்றை மேற்கொண்டு ஸ்காபுறோ நகரில் தமிழ் இளைய சகோதரர்கள் திரு விஜய் கோணேஸ்வரன் தலைமையில் நடத்திவரும் S & B Pallets Ltd, என்னும் வெற்றிகரமான தொழிற்சாலைக்கு விஜயம் செய்தனர்.
இந்த நிறுவனம் , இளம் தமிழ் கனடிய சகோதரர்களுக்குச் சொந்தமானது, திரு. விஜய் கோணேஸ்வரன் அவர்களின் தலைமையில்..
ஒன்ராறியோவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கியதற்காக விஜய் கோணேஸ்வரன் மற்றும் அவரது சகோதரர்களுக்கு ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் கௌரவ டக் போர்ட் அவர்கள் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.
படங்கள்: சத்தியன் மற்றும் ஐயா4யு