யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்ட மூத்த விரிவுரையான செல்வி பரமேஸ்வரி கணேசன் சென்ற செவ்வாய்க்கிழமை தமது பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். காரைநகரைச் சேர்ந்த புகழ் மிக்க இசைப் பாரம்பரியத்திலிருந்து வந்தவரான செல்வி பரமேஸ்வரி முன்னணிக் கலைஞர்களின் சமூகத்தில் சிறந்த கர்நாடக இசைக் கச்சேரியை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடதத்தக்கதாகும். கர்நாடக இசைத்துறையில் சிறந்த ஆற்றுகையாளரான செல்வி பரமேஸ்வரி கணேசன் இசைத்துறையின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறித்து இசை உலகைச ; சேர்ந்த பலரும் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும ; தெரிவித்து வருகின்றனர். கனடாவில் வாழும் அவரது அபிமானிகளும் அன்;னாரின் பதவி உயர்வை முன்னிட்டு வாழ்த்துவதில் பெருமையடைகின்றார்கள்.
