பொலிஸ் அதிகாரி மோட்டர் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓட்டம் மட்டக்களப்பில் சம்பவம்
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பில் கச்சேரியில்வேலை செய்வதாக போலி வேசமிட்டு இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு பொருளாதார ரீதியில் உதவுதாக அவரை நகர்பகுதிக்கு வரவழைத்து திருமணம் கடந்த உறவுக்கு வருமாறு அழைத்த கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் மட்டக்களப்பைச் சோந்த பொலிஸ் அதிகாரி மீது அப்பெண்ணும் கணவனும் இணைந்து வீதியில் வைத்து தாக்குதலையடுத்து அவர் மோட்டர்சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை(13) இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் குறித்த பொலிஸ் பரிசோதகர் கடமையாற்றிய காலத்தில் குறித்த பெண்ணின் கணவருக்கு நீதிமன்ற பிடியாணை தொடர்பாக அவரைதேடி அவரது வீட்டிற்கு சென்ற பொலிஸ் பரிசோதகர் பெண்ணின் கணவர் அங்கு இல்லாததையடுத்து பெண்ணின் கையடக்க தோலைபேசி இலக்கத்தை பொலிஸ் பரிசோதகர் வாங்கி எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் சில நாட்களின் பின்னர் பெண்ணின் தொலைபேசிக்கு தான் கச்சோரியில் கடமையாற்றி வருவதாகவும் பலருக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்துவருவதாகவும் உங்களுக்கு உதவி செய்துதருவதாக தெரிவித்த நிலையில் குறித்த பெண் தனது குடும்ப கஷ;டங்களை தெரிவித்து வந்துள்ளார்.
இவ்வாறு நீண்டகாலமாக தொலைபேசி ஊடாக இருவரும் உரையாடி வந்த நிலையில் போலி வேசமிட்டுவந்த பொலிஸ் பரிசோதகர் குறித்த பெண்ணை திருமணம் கடந்த உறுவுக்கு வருமாறும் தான் நகரிலுள்ள தபால்கந்தோர் அருகில் காத்திருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து இது குறித்து தனது கணவருக்கு மனைவி தெரிவித்த நிலையில் சம்பவதினமான நேற்று பகல் குறித்த பெணணும் கணவரும் மோட்டார் சைக்கிளில் குறித்த இடத்திற்கு சென்று கணவனை அந்த பகுதியில் இறக்கி ஒளிந்து இருக்குமாறு தெரிவித்துவிட்டு பெண் தனியாக வந்துள்ளதாக மோட்டார் சென்றுள்ள நிலையில் பெண்ணைகண்டு அங்கு மோட்டர் சைக்கிளில் காத்திருந்த போலி வேசமிட்ட பொலிஸ் பரிசோதகர் சிவில் உடையில் சென்று சந்தித்தபோது குறித்த பெண் பொலிஸ் பரிசோதகரை கண்டு பெண் பொலிஸ் என அடையாளம் கண்டு கச்சேரியில் வேலை செய்வதாக பொய் தெரிவித்து ஏமாற்றியுள்ளாய் உன தெரிவித்தார்
இதனை தொடர்ந்து பொலிஸ் பரிசோதகரின் மோட்டர்சைக்கில் திறப்பை பெண் கைப்பற்றியதையடுத்து அவரின் கையை பிடித்து இழுத்ததையடுத்து அங்கு ஒளிந்திருந்த பெண்ணின் கணவன் சென்று குறித்த பொலிசாருடன் இழுபறியையடுத்து பொலிசார் மீது கணவனும் மனைவியும் தாக்குதலையடுத்து பொலிஸ் பரிசோதகர் மோட்டர் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு தப்பி ஓடியள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு சென்று பொலிஸ் பரிசோதகரால் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்தபோதும் அவர்கள் அசமந்த போக்கினையடுத்து பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு சென்று முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக பொலிஸ் பெண்கள் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் பொலிஸ் பரிசோதகர் விட்டுவிட்டு ஓடிய மோட்டர் சைக்கிளை மீட்டதுடன் இது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த பொலிஸ் பரிசோதகர் கடந்த காலங்களில் மட்டு அம்பாறை மாவட்டங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றியபோது பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாட்டிற்கு செல்லும் பெண்களை திருமணம் கடந்த உறவுக்கு அழைத்துள்ளதாக பல குற்றச்சாட்டி செய்யப்பட்ட முறைப்பாடுகளையடுத்து அவரை வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்திருந்தபோதும்.
அவர் அரசியல்வாதிகளின் செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் இந்த பகுதிகளுக்கு வந்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் இவருக்கு எதிராக பெண் பொலிசார் உட்பட பல பெண்கள் முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது