மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் கனடா வாழ் பழைய தமிழ் மாணவர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!
மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் கனடா பழைய தமிழ் மாணவ ஒன்றியம் தனது இருபத்தி மூன்றாவது வருடாந்த இராப்போசன ஒன்றுகூடலை இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இருபத்தி நான்காம் திகதி (24th of February 2024) நடாத்த உள்ளது.
· இடம்: Kennedy Convention Centre, located at 1199 Kennedy Rd, Scarborough, ON M1P 2L2
· நேரம்: 5 pm EST
இராப்போசன நிகழ்வோடு உங்களை மகிழ்விக்க பழைய மாணவர்களும் அவர்களது குடும்பத்தவர்களும் பங்குபற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளும் தயாராக இருக்கும். இந்த நிகழ்விற்கு மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் கனடா வாழ் பழைய தமிழ் மாணவர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் அன்போடு வரவேற்கின்றோம்.
இந்த நிகழ்வானது பல்கலைக்கழக நண்பர்களோடு ஒன்றுகூடவும், பல்கலைக்கழக இனிய நாட்களை மீட்டுப்பார்க்கவும், புதிய நண்பர்களை உருவாக்கவும் சிறந்த இடமாக அமையும். மேலும் நாம் கடந்து வந்த பல்கலைக்கழக நாட்களையும் நமது வாழ்க்கைப்பாதையில் நடந்த நிகழ்வுகளையும் நாம் படைத்த சாதனைகளையும் நமது பல்கலைக்கழக நண்பர்களோடு பகிர்ந்து மகிழ ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
நன்றி.
இளவஞ்சி கனகநாயகம்
செயலாளர் – UMTAAC
UMTAAC Committee 2023/24