கடந்த சில மாதங்களாக கனடாவின் மத்திய அரசு மட்டத்தில் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக பேசு பொருளாகவும் பாராளுமன்ற அமர்வுகளில் விவாதப் பொருளாகவும் உள்ள ArriveCan செயலியை உருவாக்க 60 மில்லியன் டாலர்களைப் பெற்ற அரசாங்க ஒப்பந்தக்காரர் ஒருவர் லிபரல் அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து மொத்தம் 258 மில்லியன் டாலர்களை மத்திய அரசின் ஒப்பந்தங்களில் பெற்றுள்ளார் என கனடாவின் கணக்காய்வாளர் நாயகம் அவர்கள் பாராளுமன்ற அங்கத்தவர்களைக் கொண்ட விசாணைக்குழுவின் முன்னார் சாட்சியம் அளிக்கும் போது தெரிவித்துள்ளார்
இந்த ArriveCan மோசடி தொடர்பாக அண்மைக்காலமாக பல விடயங்கள் வெளியில் வந்துள்ள நிலையில் கனடாவின் கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் பல விபரங்களை பகிர்ந்துள்ளார்.
கனடாவின் மத்திய எதிர்க்கட்சியாக விளங்கும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் உட்பட பல உறுப்பினர்கள் கடந்த காலத்தின் ஒவ்வொரு ஒப்பந்தத்தையும், இவ்வாறான ஒப்பந்தங்களுக்கு செலுத்தப்படும் ஒவ்வொரு டாலரையும் விசாரிக்க கனடாவின் கணக்காய்வாளர் நாயகத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
கோவிட்- 19 அதிக வீச்சுடன் இருந்த காலத்தில் இந்த ArriveCan என்னும் செயலியை கனடிய அரசாங்கம் அவசியம் எனக்கருதி அதனை அமுலுக்கு கொண்டு வர தீர்மானித்தது. தற்போது இந்த ஒப்பந்த விவகாரத்தில் பல மில்லியன் டாலர்கள் மோசடி நடைபெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை கனடாவின் கணக்காய்வாளர் நாயகம் அறிவித்ததைத் தொடர்ந்து கனடாவின் எதிர்க்கட்சியான கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பாராளுமன்றத்தில் பிரதமரை நோக்கி கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தார்.
.
கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்டுவரும் அறிக்கைகளின் பிரகாரம் மத்திய அரசோடு ஒப்பந்தங்கள் செய்திருந்த GC Strategies என்னும் நிறுவனமானது சுமார் 140 மத்திய அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை 2015ல் இருந்து மொத்தம் $258 மில்லியனை அபகரித்துள்ளது என்றும் . இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் என்று கனடாவின் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் திணைக்களம் அறிவித்தது.
இவ்வாறிருக்க. கனடாவின் கணக்காய்வாளரம் நாயகம் கரேன் ஹோகன் அவர்கள் கடந்த திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார், அதில் ArriveCan இன் விலை மதிப்பிடப்பட்ட $59.5 மில்லியனாக இருந்தது, இந்த செயலியின் விலை ஆரம்பத்தில் $80,000 மட்டுமே என்று கூறப்பட்டது.
மேலும் இந்த ஒப்பந்தங்களில் ஏறக்குறைய அரைவாசியானது கனடா எல்லை சேவைகள் திணைக்களத்தினால் GC உத்திகளுக்கு வழங்கப்பட்டது. ஒப்பந்தங்களில் நாற்பத்தாறு ஒப்பந்தங்கள் ஒப்பந்தங்கள் விலை கோராமலேயே GC Strategies நிறுவனத்திற்கு அவர்கள் சமர்ப்பித்த விலைகளுக்கு வழங்கப்பட்டன.
பின்னர் விசாரணைகளைத் தொடர்ந்து இரண்டு நபர்களைக் கொண்ட ஐடி நிறுவனம் உண்மையான தகவல் தொழில்நுட்பப் பணிகளைச் செய்யவில்லை என்றும் ஆனால் அரசாங்க ஒப்பந்தங்களில் $250 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். ArriveCan உடன், GC உத்திகள் ஒப்பந்தத்தைப் பெற்றன, ஆனால் மற்றவர்களுக்கு ஒப்பந்தப் பணியை தங்களுக்கு கீழ் ஒப்பந்தம் செய்தது.
“ஒரு புறநகர் அடித்தளத்தில் செயல்படும் இரண்டு நபர்களைக் கொண்ட நிறுவனம், மத்திய அரசாங்கத்துடன் $250 மில்லியன் வணிகம் செய்ய முடியும் என்பது காரணத்திற்கு அப்பாற்பட்டது. எனவே இன்று, அதனால்தான் தங்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு டாலரையும் விசாரிக்க கணக்காய்வாளர் நாயகத்தை அழைக்கிறோம், ”என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறினாரகள்.
கன்சர்வேடிவ் எம்.பி கார்னெட் ஜெனுயிஸ், தனது உரையில் கணக்காய்வாளர் நாயகம் ஹோகனின் அறிக்கை ட்ரூடோ அரசாங்கத்திற்கும் ஜி.சி ஸ்ட்ராடஜீஸ் ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையே உள்ள நெருக்கமான உறவைக் காட்டுகிறது என்றார்.
ArriveCan உண்மையில் என்ன செலவாகும் என்பதை மதிப்பிட முயற்சிக்கும் போது, பல வருடங்களில் தான் பார்த்த மிக மோசமான புத்தக பராமரிப்பு என்று கூறியதால் தான் குழப்பமடைந்ததாக கணக்காய்வாளர் நாயகம் ஹோகன் கூறினார்.
அவர் இந்த மோசடி தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்”விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளின் சில அடிப்படை மற்றும் அடிப்படைக் கொள்கைகளுக்கு இதுபோன்ற வெளிப்படையான புறக்கணிப்பு இருப்பதை நான் கண்ட முதல் எடுத்துக்காட்டு இதுவாகும்,” என்று அவர் கூறினார்.
கன்சர்வேடிவ் தலைவர் Pierre Poilievre, ArriveCan மீதான குற்றவியல் விசாரணையை தொடர்ந்து நடத்தும் வகையில் கனடாவின் றோயல் கனடியன் மவுன்ட் பொலிசாருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வாறிருக்கையில். எதிர்க்கட்சித் தலைவர் Poilievre செவ்வாயன்று பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கையில் தனது கட்சி இரண்டு நாடாளுமன்றக் குழுக்கள், பொதுக் கணக்குக் குழு மற்றும் அரசாங்க செயல்பாடுகள் மற்றும் மதிப்பீடுகள் குழு ஆகியவற்றைக் கவனிக்க நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.
“ArriveCan ஊழலின் மையமாக இருக்கும் மற்றும் ஒட்டாவாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அடித்தளத்தில் முகவரியைக் கொண்டு இரண்டு ஊழியர்களைக் மட்டுமே கொண்ட ஒரு நிறுவனம், ஒப்பந்தங்களில் பில்லியன் கணக்கான டாலர்களைப் பெற்றது. எப்படி என்று கேள்வியை முன்வைத்து இது அர்த்தமில்லை. ஏதோ குழப்பம் இருக்கிறது. இரகசியங்கள் உள்ளன. எங்களுக்கு உண்மை தேவை. ஊழல் முன்னெப்போதையும் விடதற்போது பெரிதாகிவிட்டது ”என்றும் கன்சர்வேடிவ் தலைவர் Pierre Poilievre, கவலையுடன் தெரிவித்தார்.
தற்போது இந்த நிதி மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகியவை தொடர்பாக கனடாவின் தேசிய ஊடகங்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருவதை அறியக்கூடியதாக உள்ளது