பெரும்பாலானவர்கள் கூறுவதை போல தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவன் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி அறிவுள்ள பௌத்த பிக்குவுமான அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ” எப்படியிருந்தாலும், நான் மேற்கத்தேய நாடுகளுக்கு அடிமைச் சேவகம் புரிவதை எதிர்க்கும் நாட்டுப்பற்றாளன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
நான் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவன் இல்லை: அதுரலியே ரத்ன தேரர் பகிரங்கம் | Athuraliye Rathana Thero Statement About Ltte அவர் மேலும் தெரிவிக்கையில், பெரும்பாலானவர்கள் நான் சிங்கள இனவாதி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவன் என்று என்னைப் பற்றி பொய்யான பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் நான் அப்படியானவன் இல்லை. அந்தந்த சந்தர்ப்பங்களின் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே எனது கருத்துக்களை வெளியிட்டிருந்தேன்.
இன்னும் விசேடமாகக் கூறுவதானால் நான் மக்களை மையப்படுத்திய பொருளாதாரத் தன்னிறை குறித்த கொள்கையைக் கொண்டவன்.
மேற்கத்தேய நாடுகளுக்கு அடிமைச் சேவகம் புரிவதை எதிர்க்கும் நாட்டுப்பற்றாளன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.