கனடா வாழ் ‘தமிழழகன் மதியழகன் அவர்களின் “சொற்கோ வி.என்.மதிஅழகன்- தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு ” நூல் அறிமுக விழா கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் ஸ்காபறோ நகரசபை மண்டபத்தில் எதிர்வரும் இருபத்தி மூன்றாம் திகதி சனிக்கிழமை ( 23-03-2024) நண்பகல் ஒன்று முப்பதுக்கு (1.30)தேநீர் விருந்துடன் விழா ஆரம்பமாகும். பல்கலை வித்தகர் அகணி சுரேஷ் அவர்கள் விழாவுக்கு தலைமை தாங்குவார்.
இலங்கை சுயாதீன பத்திரிகா சமாஜம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை சுயாதீன தொலைக்காட்சிச் சேவை, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், கனடா ரி.வி.ஐ தொலைக்காட்சி ஆகியவற்றில் 50 ஆண்டு காலத்துக்கும் மேலான சேவைக்கால அனுபவமுள்ளவர் ” சொல்லாயன் ” வி.என்,மதிஅழகன் .
இலங்கை ஒலிபரப்புத்துறை அதன் ஒரு நூற்றாண்டு காலப் பூர்த்தியை அடுத்த ஆண்டில் கொண்டாட ஆயத்தமாகி வரும் அதே வேளையில் ” சொற்கோ வி.என்.மதிஅழகன்-தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு” நூல் சென்னை காந்தளகம் பதிப்பகத்தால் வடிவமைக்கப்பட்டு வெளியானது.
வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் ஆறாந் திகதி சிறப்பாக இடம் பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஸ்காபறோ சிவிக் சென்ரர் நூல் அறிமுக விழாவில் எழுத்து – மின்னியல் ஊடகர்கள்,பல்துறைக் கலைஞர்கள், கல்விமான்கள், அறிஞர்கள், பாடசாலைப் பருவகால நண்பர்கள், மூத்த குடிமக்கள் ,சமூகத் தலைவர்கள், வானொலி – தொலைக்காட்சி நேயர்கள், தமிழ் உணர்வாளர்கள் என பலதரப்பட்டவர்கள் பங்குபற்றுவர் என அறிவிக்கப்ப்ட்டுள்ளது