நூற்றுக்கணக்கான அங்கத்தவர்களைக் கொண்டு நெருக்கமான ஒற்றுமையுடன் ஒன்று பட்ட நோக்கங்களோடு கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் யாழ்ப்பாணம் கந்தர் மடம் மக்கள் ஒன்றியத்தின் இவ்வருடத்தின் ஒன்றுகூடல் கடந்த 24-03– 2024 அன்று மாலை 7 மணியளவில்
2648 Eglinton Ave E , என்னும் விலாசத்தில் அமைந்துள்ள East Town Banquet மண்டபத்தில் இடம் பெற்றது
இந்த வைபவம் குளிர்கால ஒன்று கூடல் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி ஒன்றுகூடல் நிகழ்விற்கு கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குடும்பத்தினர் நண்பர்கள் மாத்திரமல்ல. அங்கத்தவர்களின் நட்பு வட்டாரங்களிலிருந்தும் பல நண்பர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் வர்த்தகப் பிரமுகர் கேதா நடராஜா அவர்களின் நட்பு வட்டாரத்தைச் சேர்ந்த பல அன்பர்கள் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
கலை நிகழ்ச்சிகளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் கலந்து வந்திருந்தவர்களை மகிழ்வித்த இந்த நிகழ்வு அனைவரில் மனங்களில் நன்கு இடம்பிடித்தது என்றால் அது மிகையாகாது
சத்தியன்