கனடா உயர்ஸ்தானிகரை அனுர குமார திசாநாயக்க சந்தித்து உரையாடினார்.
நடராசா லோகதயாளன்
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) அவர்களை தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி) தலைவர் அனுர குமார திசாநாயக்காவை சந்தித்ருக் கலந்துரையாடினார். விரைவில் ஜானதிபதி தேர்தல் நடைபெறக்கூடும் என்கிற பின்புலத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் அனுர குமார திசாநாயக்க தொடர்ச்சியாக பன்னாட்டுத் தூதர்களை சந்தித்து உரையாடி வருகிறார்.
அனுர அவ்வகையில் கனேடியத் தூதரையும் அவர் சந்தித்து உரையாடியுள்ளார். கனேடியப் பயணம் ஒன்றை அவர் மேற்கொள்ளவுள்ள நிலையில், தூதர் எரிக் வொல்ஷுடனான இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இலங்கையில் நிலவுகின்ற சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரிவாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் பற்றியும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான கனேடிய தூதுவருடன் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) பெற்றிக் பிக்கரிங்கும் (Patrick Pickering) தேசிய மக்கள் சக்தியின் சார்பாக விஜித ஹேரத்தும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அணமைக. காலமாக ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திசாநாயக்காவை பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் தூதுவர்கள் விசேடமாக சந்தித்து வருகின்றமையும்
குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெற வேண்டும் அவ்வகையில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் அளவில் அந்த தேர்தல் இடம்பெறக் கூடும் என்று கூறப்படுகிறது. இதே வேளை அண்மைக்காலத்தில் நடைபெற்ற சில கருத்துக்கணிப்புகள் அனுர குமார திசநாயக்காவிற்கே வெற்றி வாய்ப்புகள் கூடுதலாக உள்ளதாக கூறின என்பதும் குறிப்பிடத்தக்கது.