– தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து
தமிழர்களின் தேசம் தேசியம். சுயநிர்ணயம் என்ற இறையான்மையைன விடையங்களை பறிக்கும் அதிகாரமோ அன்றி தமிழர்கள் எப்படி வாழவேண்டும் என்ற தீர்மானமோ., சீனா, அமெரிகா. இந்தியா உட்பட எந்தவொரு வெளி நாடும் எடுக்கமுடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் கட்சி காரியாலயத்தில் 20-03-2024 அன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழர் தேசம் தேசிய இனமா? அல்லது குறுந்தேசிய இனமா என்ற அடிப்படையில் அரசியல் நகர்வை முன்னெடுக்க போகின்றோமா? என்றதன் அடிப்படையில் எதிர்காலத்தை முன்னெடுக்க வேண்டும் அரசியல் பிரமுகர்கள் கூறிவார்கள் நாங்கள் ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் என்றால் இந்த நாட்டுக்கு அல்லது அந்த நாட்டிற்கு ஆதரவாக செல்லவேண்டும் என இன்றைய யாதார்தம் பூலோக அரசியலில் போட்டி நடக்கின்றது சீனா ஒருபக்கம் அமெரிக்கா ஒருபக்கம், இந்தியா ஒருபக்கம் என ஒவ்வொரு நாடுகளும் தங்களது வெளிவிவகார கொள்கைகளுக்காக தங்களது தேவைக்காக முன்னெடுத்து வருகின்றன.
தமிழர்கள் எப்படி வாழவேண்டும் தமிழர்களின் தேசம் என்ற விடயத்திலே தேசியம் சுயநிர்ணயம் என்ற விடயத்திலே எந்தவொரு நாட்டிற்கும் எமது இறையான்மையை பறிக்கும் அதிகாரம் கிடையாது
நாங்கள் இலங்கை தீவில் வாழுகின்றோம் என்ற அடிப்படையில. இந்த தீவின் சட்டங்களுக்கும் இறைமைக்கும் நாங்கள் பொறுப்புடையவர்கள். ஆனால் எமது எதிர்காலத்தை பார்க்கவேண்டும் என்ற அடிப்படையில் வெறுமனவே அரசியலுக்காக எமது அடிப்படை நிலைப்பாட்டில் இருந்து மாற முடியாது அவ்வாறு மாறினால் எதிர்காலத்தில் தமிழர்களுக்கு என்ற தீர்வு வரப்;போவதில்லை.
இந்து சமுத்திரத்தில் தமிழர்கள் ஒரு பன்மையானகுடி தென்ஆபிரிக்கா, றிவூனியன் தீவில், மொரிசியஸ்தீவில், மலேசியா, தமிழ்நாட்டில், தமிழீழத்தில், போன்று இந்து சமுத்திர பிராந்தியத்தில் முக்கிய இனமா வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் எனவே பூலோக அரசியலில் போட்டியில் ஒவ்வொரு நாட்டுக்கும் தமிழர்களின் ஆதரவு தேவை என்பதை நாங்கள் உணரவேண்டும்.
அதேபோல ஒவ்வொரு நாடுகளும் தமிழர்களது அபிலாசைகளையும் உரிமையையும் உணரும் தன்மை இருக்கவேண்டும் வெளிநாடுகளுக்கு எமது நிலைப்பாட்டை தெளிவாக கூறவேண்டும் தமிழர்களின் நிலைப்பாடு தொடர்ச்சியாக செல்லவேண்டும்
நான் சிறுவயதில் வெளிநாடு சென்று திரும்பியபோது ஏன் இரு இனங்களும் ஒன்றாக வாழமுடியாது என நினைத்தவன் ஆனால் எனது அனுபவம் ஒரு விடயத்தை தெட்ட தெளிவாக காட்டுகின்றது இலங்கை தீவில் தமிழர்களை குறுந்தேசிய இனமாக மாற்றும் திட்டம் தான் சிங்கள தேசியத்திடம் உள்ளது.
ஜே.வி. பி ஒரு இடது சாரிகட்சி அவர்கள் தமிழர்களது உரிமையை அங்கீகரத்து இருக்க வேண்டிய கட்சி ஆனால் இன்று தமிழ் மக்களுக்கு தீர்வு தருவோம் அரசியல் செய்கின்றோம் சாப்பாடுதருகின்றோம் அது எல்லாம் கதையாகதான் இருக்கபோகின்றது
ரணில், அநுரா .சஜித்து , ராயபக்ஸ, கோட்டா, சந்திரிக்கா உட்பட சிங்கள தேசத்தைச் சார்ந்த அனைத்து தலைவர்களும் சரி வலதுசாரிகட்சிகளாக இருக்கட்டும் இடதுசாரிகட்சிகளாக இருக்கட்டும் அனைவரும் உண்மையில் அடிப்படை யதார்த்த்தை உணர்ந்து தமிழர்களுக்கான ஒரு நேர்மையான கௌரவமான தீர்வை அததை ஏற்றுக் கொள்ளவேண்டும் ஆனால் அவர்கள் எவரும் தமிழர்களுக்கு தீர்வு வழங்கபோவதில்லை எனவே 70 வருட போராட்டத்தின் பின்னர் இந்த சிங்க அரசியல் கபடநாடகத்தை எல்லாம் தமிழ் தலைமைகள் விட்டுவிட்டு தெளிவான தெளிவு நிலைக்கு வரவேண்டும்.
தமிழ் தேசியத்துக்குள் அபிவிருத்தி தேவை நாங்கள் அரச கட்டமைப்பின் வெளியே தமிழர்களுக்கு என்ற ஒரு பொருளாதாரத்தை வளர்க்கவேண்டும் வெறுமனவே அரச உத்தியோத்திற்காகவும் இடமாற்றத்திற்காகவும் அரசியலை முன்னெடுத்து நமது இனம் எந்த எதிர்காலத்தையும் காணமுடியாது எனவே நாங்கள் தன்னிச்சையான பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் ஏற்படுத்தவேண்டும்.
அதேவேளை ஜளாதிபதி அதை செய்கின்றேன் இதை செய்கின்றேன் என யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கிவிட்டு அங்கு எந்திவிதமான விமானமும் இறங்க ஏற்படுத்தவில்லை ஏன்? அதன் அர்த்தம் என்ன தமிழர்களின் பொருளாதாரம் முடக்கப்படவேண்டும் அதேபோல தான் தமிழீழத்தில் ஒவ்வொரு பிரதேசத்திலும் எந்த அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படவில்லை
மட்டக்களப்பில் விமான நிலையம் இருக்கின்றது ஆனால் பொலன்னறுவையில் சர்வதேசவிமான நிலையம் அமைக்கின்றனர் ஏன், இன்று அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா பதவில் இருந்தாலும் கூட தமிழீழ வடக்கு கிழக்கில் நீரியல் துறையில் எந்த அபிவிருத்தி முன்னெடுப்பும் செய்யமுடியாது ஏன் என்றால் அதுதான் இலங்கை சிங்கள தேசக் கட்டமைப்பு.
எனவே தொடர்ச்சியாக இதனை பேசிக் கொண்டுடிருப்பதில் அர்த்தமில்லை தெளிவான முடிவுகளை எடுக்கவேண்டும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் முக்கியம் தான் ஆனால் அந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் அனைவரும் தெட்ட தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் தமிழர் பிரதிநிதிகளாகச் செல்பவர்கள் சிங்களதேசத்தின் கட்டமைப்பால் உருவாக்கப்படும் வசதிகள் அனைத்து சலுகைகளையும் பெற்று அரசியல் செய்யும் நிலை மாறவேண்டும் அப்போது தான் எமது மக்களின் பிரச்சனைகளை உணரமுடியும்
சர்வதேச சட்டரீதியில் ஒன்றை உணரவேண்டும் தமிழ் மக்கள் 1977 ம் ஆண்டு வட்டுக்கோட்டை பிரகடனத்தின் அடிப்படையில் ஆனையை கொடுத்தார்கள் அதன் பின் பல கலவரங்களில் பல தமிழர்கள் உயிரிழந்துவிட்டனர் அதேபோல் பல தமிழ்மக்கள் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழுகின்றனர்.
அன்று ஆனையை கொடுத்த மக்களின் வாரிசுகள் எல்லோரும் இந்த தமிழீழத்தில் வாழவில்லை எனவே அந்த மக்களின் உரித்தான தேசம். தேசியம் சுயநிர்ணய வரைபுகளை இன்று எவரும் மாற்ற முடியாது மாற்றவேண்டுமானால் 6 ம் திருத்த சட்டத்தை நீக்கிவிட்டு வேனும் என்றால் தமிழ் மக்களிடம் ஒரு ஆனையை கோரமுடியும் எனவே தமிழ் தலைமைகள் ஒருமித்த நாடு பிரிக்கமுடியாத நாடு என்று பேசதேவையில்லை
6ம் திருத்த சட்டத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுவதே அல்லது பதவிகளை வகிக்கும் போது அவர்கள் இலங்கையை பிரிக்க முடியாது என்ற அந்த கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இலங்கையை பிரிக்க முடியாது என்ற அடிப்படையில் தமிழர்கள் தமது தேசத்தை மாநிலமாகவே அல்லது மாகாணமாகவே அல்லது வேறு எந்தமுறையில் ஒரு சுயாட்சி முறையை உருவாக்க முடியாது என்ற இலங்கையில் எந்த சாதனத்திலும் இல்லை என்றார்.