எதிர்வரும் 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘திரை இசை இலக்கியமும் வாழ்வியலும்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் வண்ணம் நூல் ஆசிரியர் மொன்றியால் வாழ் கவிஞரும் எழுத்தாளருமான ஆ. சிறீஸ்கந்தராஜா (ஆறு சிறீகாந்தன்) அவர்கள் ரொறன்ரோ வாழ் கலை இலக்கிய நண்பர்கள் மற்றும் வாசகர்களை அழைக்கின்றார்.
அன்றைய தினம் பிற்பகல் 1.30 தொடக்கம் நடைபெறவுள்ள இந்த வெளியீட்டு விழா எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகை மற்றும் ஊடகதுறை சார்ந்த நண்பர்கள் சிறப்புரைகளை ஆற்றவுள்ளார்கள்.
இந்த நூலில் அடங்கியுள்ள விடயங்கள் தமிழ்த் திரைப்படப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர்கள் ஆகியோரின் அபாரத் திறமையினால் எமக்கு கிடைத்த பொக்கிசங்களாக விளங்கும் பாடல்களின் சிறப்புக்களை எடுத்தியம்புகின்றன.
அனைவரும் அன்புடன் அழைக்கப்பெறுகின்றனர்.