வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி வந்த மற்றொரு தாயார் நேற்று உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – கொம்மாந்துறை செங்கலடியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான, சித்திரவேல் அன்னம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 1994 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 26 வருடங்களாக தேடி வந்த நிலையிலேயே இந்த துயரம் இடம்பெற்றுள்ளது.