சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 – வது படமான ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
கடந்த வாரம் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த முன்னோட்டத்தில் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார்.
இந்நிலையில் இப்படத்தில் விக்ரம் 3 வேடத்தில் நடிக்கிறார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.