திருகோணமலை- அலஸ்தோட்டம் கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சடலம் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பள்ளத்தோட்டம் பகுதியில் திருமணமாகாத நிலையில் தனிமையாக வாழ்ந்து வந்த 46 வயதுடைய நபர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.