தக் லைஃப் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் படப்பிடிப்பில் நடிகர் சிம்புவும் இணைந்துள்ளார். நாயகன் வெளியாகி 33 ஆண்டுகளுக்குப் பின்னர் கமல் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. கமலின் 234-வது படமான இதன் தலைப்பு தக் லைஃப் என முன்னோட்டத்துடன் கடந்தாண்டு பதிவேற்றம் வெளியானது. அதனுடன் தக் லைஃப் படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ், கெளதம் கார்த்திக் ஆகியோர் நடிப்பதையும் படக்குழு உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்குப் முன் தொடங்கிய தக் லைஃப் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேர்தலுக்குப் பின்னர் டில்லியில் நடக்கும் தக் லைஃப் படப்பிடிப்பில் கமல் கலந்துகொண்டார். அவருடன் சிம்பு, த்ரிஷா நடித்து வருவதாக தகவல்கள் தக் லைஃப் படப்பிடிப்பில் கமலுடன், ம்புவும் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதேபோல், கமல், சிம்பு ஆகியோருடன் அபிராமி, நாசர் ஆகியோரும் தக் லைஃப் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளனர் டில்லியை தொடர்ந்து சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் இருந்து விலகிய ஜெயம் ரவிக்கு பதிலாக, அசோக் செல்வன் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரம் தக் லைஃப் படத்தில் நடித்து வரும் சிம்புவின் காணொளி இந்த வார இறுதிக்குள்ளாகவோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.