முல்லைத்தீவு – கரைதுரைப்பற்று, வற்றாப்பளைப் பிரதேசத்தில் ஒரு மில்லியன் ரூபா செலவில் கம்பரலிய திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட சிறுவர் பூங்கா இதுவரை திறக்கப்படாது பற்றைகள் மண்டிக்காணப்படுகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வற்றாப்பளைக் கிராமத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவின் சிபாரிசுக்கு அமைவாக கம்பரலியத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்த சிறுவர் பூங்கா இதுவரை திறக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி சிறுவர் பூங்காவின் கட்டுமானப்பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கடந்த ஆறுமாத காலமாக எந்தப்பணிகளும் முன்னெடுக்கப்படாமலும் திறந்து வைக்கப்படாமலும் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் தற்போது பற்றைகள் மூடிக்காணப்படுகின்றன.
அபிவிருத்தி என்ற போர்வையில் இவ்வாறு பாரிய நிதி செலவிட்டு மேற்கொள்ளப்பட்டு இவ்வேலைத்திட்டமானது மக்கள் பயன்பாடின்றி இருப்பது தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.