(மன்னார் நிருபர்)
15.07.2021
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் எண்ணக்கருவில் உருவான செளபாக்கியா செயற்திட்டத்தின் அடிப்படையில் மாவட்ட ரீதியில் சௌபாக்கியா உற்பத்தி கிராம களஞ்சிய சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பெரிய மடு கிராமத்தில் இன்று வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு இடம் பெற்றது.
மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தினுடாக நடை முறை படுத்தப்படும் இத்திட்டத்திற்காக 11.4மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் , மாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமாரன்,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரன், திணைக்கள தலைவர்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.