உதயன் வெளியிட்டுள்ள இலங்கைச் சிறப்பிதழ் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி திருநெல்வேலி காளிகோவிலடி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை (05.09.2022) நடைபெற்றுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி நா. சண்முகலிங்கன், சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.பாரதி, ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் கௌரி முகுந்தன், வலிகிழக்கு பிரதேசசபைத் தலைவர் தி. நிரோஷ் ஆகியோர் கலந்துகொண்டு இலங்கைச் சிறப்பிதழ் பற்றியும் உதயன் ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் சமூக, இலக்கிய, ஊடகப் பணிகள் குறித்தும் உரையாற்றியிருந்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் கனடாவில் இருந்து சென்றிருந்த வீணை மைந்தன் கே.ரி. சண்முகராஜா உதயன் பத்திரிகையின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். நிகழ்ச்சியின் இறுதியில் திருநெல்வேலி மற்றும் அதன் அயற் கிராமங்களில் உள்ள சனசமூக நிலையங்களுக்கு இலங்கைச் சிறப்பிதழின் பிரதிகள் வழங்கப்பட்டன. இலங்கைச் சிறப்பிதழ் அறிமுக நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு ஏராளமானவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.