நடிகர் சிவகார்த்திகேயன் ராகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையைல் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் ஏ.ஆர். முருகதாஸூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து அவர் இயக்கத்தில் நடிப்பதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். சமூ ஊடகங்களில் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளப் பதிவில் என்னுடை 23வது படத்திற்காக உங்களுடன் இணைவதில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் சொன்ன கதை கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தேன். இதப்ட படம் எல்லாவிதத்திலும் எனக்கு முக்கியமான படம். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக இன்னும் என்னால் காத்திருக்க முடியாது எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயன் காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.