கடந்த நவம்பர் 12 ம் தேதி வெளியான சல்மான் கானின் டைகர் 3 திரைப்படம் சுமாராகவே போனது. அதற்குமுன் அவரது நடிப்பில் வெளியான, கிஸி கா பாய் கிஸி கை ஜான், அன்டிம், ராதே படங்களும் பாக்ஸ் ஆபிஸில்வெற்றி பெறவில்லை. ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹே படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அதன் மூன்றாவதுபாகமான டைகர் 3 சுமாராகப் போனது சல்மான் கான் கரியரில் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இப்போது அவர் கைவசம் உள்ள இன்னொரு வெற்றிகரமான சீரிஸ், தபாங். 2010 இல் வெளியான ஆக்ஷனும், காமெடியும் கலந்த தபாங் படம் சல்மான் கானுக்கு பம்பர்ஹிட் திரைப்படமாக அமைந்தது. திலீப் சுக்லா, அபினவ் சிங் காஷ்யப் இருவரும் இணைந்து எழுதிய இந்தப் படத்தை அபினவ் சிங் காஷ்யப் இயக்கியிருந்தார். சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் தனது மனைவி மலைக்கா அரோராவுடன் இணைந்து படத்தைத்தயாரித்தார். தபாங் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழில் ஒஸ்தி என்ற பெயரிலும், தெலுங்கில் கப்பார் சிங்என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் ஒஸ்தி தோல்வியடைய, கப்பார் சிங் வெற்றி பெற்றது. 2012 இல், திலீப் சுக்லா எழுத்தில் அர்பாஸ் கான் தபாங் 2 படத்தை இயக்கினார்.
அவரும், அவரது மனைவிமலைக்கா அரோராவும் படத்தைத் தயாரித்தனர். அந்த வருடம் வெளியாகி பம்பர் ஹிட்டான சல்மான் கானின்ஏக் தா டைகர் படத்தின் வசூலை தபாங் 2 முறியடித்தது. 2019 இல் தபாங் 3 படத்தை பிரபுதேவா இயக்கினார். பிரபுதேவா, சல்மான் கான், அலோக் உபாத்யயா ஆகியோர் திரைக்கதை எழுத, சல்மான் கான், அர்பாஸ் கான், நிகில் திவேதி ஆகியோர் தயாரிப்பில் தபாங்கின் மூன்றாவது பாகம் தயாரானது. ஆனால், முந்தைய பாகங்கள்அளவுக்கு இது வெற்றி பெறவில்லை. இந்த காலகட்டத்தில் அர்பாஸ் கானை அவரது மனைவி மலைக்காஅரோரா பிரிந்திருந்தார். அதனால், படத்தின் தயாரிப்பில் அவர் இடம்பெறவில்லை.