2019 இல் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு யாத்ராஎன்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. இதில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக மம்முட்டியும், அவரது மகன்இந்நாள் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியாக ஜீவாவும் நடித்திருந்தனர். மஹி வி.ராகவ் இயக்கியயாத்ரா ஆந்திராவில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறை யாத்ரா 2 என்ற பெயரில் மஹிவி.ராகவ் இயக்கினார். இதில் ஜெகன் மோகன் ரெட்டியாக பிரதான வேடத்தில் ஜீவா நடித்துள்ளார். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக மம்முட்டி. இந்தப் படம் நேற்று திரைக்கு வந்த நிலையில், ஜெகன் மோகன்ரெட்டியின் தொண்டர்கள் மேள தாளத்துடன் பட வெளியீட்டை கொண்டாடினர். ஹைதராபாத்தில் உள்ளதிரையரங்கில் யத்ரா 2 படம் ஓடிக் கொண்டிருக்கையில் ஜெகன் மோகன் ரெட்டியின் தொண்டர்களுக்கும், பவன் கல்யாண் ரசிகர்களுக்கும் இடையில் சண்டை மூண்டது. நடிகர் பவன் கல்யாண் தனிக்கட்சி தொடங்கி, ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக அரசியல் செய்து வருகிறார். இதனால் ஜெகன் மோகன் ரெட்டியின்கட்சியினருக்கும், பவன் கல்யாண் ரசிகர்களுக்கும் இடையில் ஏற்கனவே உரசல் இருந்து வந்துள்ளது.