வரணி கரம்பைக்குறிச்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அமரர்கள் கதிரன் கந்தையா கந்தையா நந்தகுமார் அவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப் பெற்ற நுழைவாயில் திறப்பு விழா 12/2/2024 திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு பாடசாலை வளாகத்தில் அதிபர் நா.கண்ணதாசன் தலைமையில் இடம் பெற்றது
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்மராட்சி கல்வி வலய கல்வி நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ந.காண்டீபன் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு நிலை அதிபர் சி.கந்தசாமி பாடசாலை பழைய மாணவர் க.கிருஷ்ணகுமார் கௌரவ விருந்தினராக ஜே342 கரம்பைக்குறிச்சி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.சிவபாதசுந்தரம் மதிப்புறு விருந்தினராக திருமதி கந்தையா செல்லம்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்
























