(கனகராசா சரவணன்;)
மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் பேரூந்து தரிப்பிடத்தின் அருகிலுள்ள வாவியில்; உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் இன்று புதன்கிழமை (29) காலை 9 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
புதிய காத்தான்குடி 6 ம் பிரிவு ஏ.எல்.எஸ். மாவத்தையைச் சேர்ந்த 49 வயதுடைய முகமது கனிபா முகம்மது அஸ்மி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த நபர் சுனயீனம் காரணமாக சம்பவதினமான நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி மட்டு போதனா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் வீடதிரும்பிவராத நிலையில் உறவினர்கள் தேடிவந்த நிலையில் வாவியில் சடலம் மீட்கப்பட்டுள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையையடுத்து சடலத்தை மீட்டு பிரோத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் உப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.