ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான மலையாள மொழிப்படம் ‘பிரேமலு’. காதல், நகைச்சுவை நிறைந்த இப்படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கியிருந்தார். இதில் மமிதா பைஜு, நஸ்லேன் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த பிப்ரவரி 9- ந் தேதி வெளியானது. கேரளாவில் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் பிப்.15- ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 8 -மகளிர் தினத்தில் தெலுங்கில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் உலக அளவில் இந்த படம் ‘பாக்ஸ் ஆபீஸ்’ வசூல் செய்துள்ளது. பிரேமலு படத்தின் வசூல் தற்போது ரூ.100 கோடியைத் தாண்டியது. வருகிற 15 – ந்தேதி தமிழில் இப்படம் ‘டப்பிங்’ செய்தும் வெளியிடப்படுகிறது. மலையாள மொழியில் வெளியான 5-வது சாதனை திரைப்படமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.