இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘சைத்தான்’. இந்த படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். சூப்பர் நேச்சூரல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த 8ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.14.75 கோடி வசூலை குவித்தது. தொடர்ந்து இரண்டாவது நாளும் படத்தின் வசூல் மேலும் ஏற்றம் கண்டது. அதன்படி ரூ.18.75 கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் ஒரே நாளில் இந்திய பாக்ஸ் ஆபீசில் ரூ.20.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் மூன்று நாட்களில் சுமார் ரூ.54 கோடி வசூலை கடந்துள்ளது.