தமிழில் வெற்றி பெற்ற பழைய படங்களை புதுப்பித்து மீண்டும் வெளியீடு செய்யும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்க ராஜேஷ் இயக்கி இருந்த திரைப்படம் பாஸ் (எ) பாஸ்கரன். இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ஆர்யாவின் நண்பராக சந்தானம் நடித்திருந்தார். படத்தில் சந்தானம் பேசிய நண்பேன்டா வசனம் மிகவும் பிரபலமானது. இந்நிலையில், ஆர்யாவின் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த படம் வரும் 22ம் தேதி மறு-வெளியீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ஆர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.