இடைத்தேர்தல் நடைபெற உள்ள விளவங்கோடு தொகுதிக்கான பாஜக வேட்பாளராக வி.எஸ். நந்தினி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.
அவர் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி கிடைக்காது என்பதால் காங்கிரசில் இருந்து பாஜவுக்குத் தாவினார். ஆனால் பாஜகவில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை.