பத்தாண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி நாட்டை ‘வங்குரோத்து’ நிலைக்குத் தள்ளிய மொ( க்கு)ட்டுக் கட்சி கூக்குரலிடுகின்றது
பத்தாண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி நாட்டை ‘வங்குரோத்து’ நிலைக்குத் தள்ளிய மொ(க்கு)ட்டுக் கட்சி நாட்டு மக்களையும் ஏழைகளாக்கியுள்ளது. அத்துடன் மகிந்த ராஜபக்ச குடும்பம்- கோடாபாய குடும்பம்- நாமல் ராஜபக்ச குடும்பம்- பசில் ராஜபக்ச குடும்பம் ஆகியன கோடீஸ்வரக் குடும்பங்களாக ஆகிவிட்ட நிலையில் இவ்வாறான அரசிற்கு எதிரான விமர்சனங்களை இந்த ‘ஊழல்வாதிகள்’ சுமத்துகின்றனர் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
.இது பற்றி மேலும் தெரியவருவதாவது.
“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, கடந்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டில் புதிதாக 10 இலட்சம் ஏழை மக்களை உருவாக்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்னும் மொ(க்கு)ட்டுக் கட்சியின் ‘கோமாளி’ சம்பத் அத்துகோரள குற்றம் சாட்டியுள்ளது.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அந்தக் கோமாளி மேற்கண்டவாறு கூறியுள்ளது..
அங்கு ‘அது’ மேலும் தெரிவிக்கையில்,
“உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கான வற் வரியை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு, தற்போது அதற்கு நேர்மாறாகச் செயற்பட்டு வருகின்றது.
துன்பங்கள் நிறைந்த இறுதிப் பௌர்ணமி தினம் என்று கூறி ஆட்சிக்கு வந்த இவர்களின் கீழ் 18 பௌர்ணமி தினங்கள் கடந்துவிட்ட போதிலும், நாட்டு மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை.
எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல், மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக வியாபாரம் செய்யும் அனைத்து வர்த்தகர்களையும் வற் வரியில் பதிவு செய்ய அரசு தீர்மானித்துள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள சிறிய கடைகளுக்கும் இந்த வற் வரி விதிக்கப்படும் போது, அந்த வரியை வர்த்தகர்கள் கிராமத்து ஏழை மக்களிடமிருந்தே அறவிடுவார்கள். இது அரசின் அனுசரணையுடன் மக்களின் பைக்கற்றுக்களைப் பறிக்கும் ஒரு பகற்கொள்ளையாகும். மகா திறைசேரியில் ட்ரில்லியன் கணக்கில் பணம் இருப்பதாகக் கூறினாலும் ஏழைகளின் இறுதிச் சதமும் சுரண்டப்படுகின்றதே தவிர நிவாரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
நாட்டின் சுகாதாரத் துறை தற்போது முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. பல முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன், மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான மருந்து வகைகள் இல்லை. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகி வரும் சூழலில், அவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கூட இல்லை. ஜனாதிபதியால் அதிக நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
தகுதியற்றவர்களை உள்ளூராட்சி அமைப்புகளுக்கு நியமித்ததால் கழிவு மேலாண்மை சீர்குலைந்து, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் அரசு திணறி வருகின்றது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ள போதிலும் அரசு அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் ஏமாற்றி வருகின்றது. தற்போதைய நிலவரப்படி பெற்றோல் லீற்றர் ஒன்றிலிருந்து 125 ரூபாவையும், டீசல் லீற்றர் ஒன்றிலிருந்து 110 ரூபாவையும் குறைக்க முடியும். துறைமுகத்துக்குக் கொண்டு வரப்படும் விலைக்கே எரிபொருள் தருவோம் என்று தேர்தல் காலத்தில் கூறியவர்கள், இன்று மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கின்றார்கள். எதிர்வரும் மாத இறுதிக்குள் இந்த விலைக்குறைப்பு கட்டாயம் செய்யப்பட வேண்டும்.
அரசின் தோல்விகளையும் ஊழல்களையும் மூடிமறைப்பதற்காக அமைச்சர்கள் ஊடகவியலாளர்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றார்கள். எரிபொருள் விலையைக் குறைக்குமாறு கேட்டபோது பிரதமர் அது “எண்ணெய் கடை அல்ல” எனக் பொறுப்பற்ற விதமாகப் பதிலளித்துள்ளார். தொழிற்சங்கத் தலைவர் ரஞ்சன் ஜயலால் தாக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றார். பொறுப்பான அமைச்சர் ஒருவர் நாட்டின் விவசாயிகளைக் கசிப்பு வியாபாரிகள் என அவமதித்துள்ளார்.
அரசு முற்றாகத் தோல்வியடைந்துள்ள நிலையில், 1988, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியைப் போல் மக்களை ஒடுக்கவும், பயமுறுத்தவும் முயற்சிக்கின்றது.” – என்றும் அது தெரிவித்துள்ளது. அதேவேளை அங்கு சமூகமளித்திருந்த ஒரே ஒரு சிங்கட மொழி ஊடகவியலாளர்கள் மேற்கண்ட கேள்வியை கேட்ட போது “நாங்கள் பின்னர் பேசுவோம்” என்றுஅவரை எச்சரிக்கும் வகையில் கூறியதாக அறியப்படுகின்றது



















