“அன்பே டயானா” படக்குழுவை நேரில் சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். தமிழில் “ஜமா” திரைப்படம் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் பாரி இளவழகன். இவர் தற்போது இயக்கி, நடித்துள்ள திரைப்படம் “அன்பே டயானா.” இந்த திரைப்படத்தின் வெளியீடை ஒட்டி நடிகர் சிவகார்த்திகேயன் “அன்பே டயானா” படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
மில்லியன் டாலர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இன்று வெளியாகிறது. இந்தப் படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். முன்னதாக அன்பே டயானா படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து படக்குழு சார்பில் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், “நீங்கள் உயர்வாக கருதும் ஒருவரிடம் இருந்து மனமார்ந்த பாராட்டு பெறுவதை விட சிறந்த வெகுமதி வேறு எதுவும் இல்லை,” என குறிப்பிடப்பட்டுள்ளது. அன்பே டயானா திரைப்படத்தில் இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் ரம்யா ரங்கநதன், சேத்தன், ரோஜா, பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


















