பாலஸ்தீனத்தின் காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக கலீல் அல் ஹய்யா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024 அக்டோபரில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட யஹ்யா சின்வாருக்குப் பின் தலைவராக கலீல் அல்-ஹய்யா நியமிக்கப்பட்டுள்ளார். கயானா படகு விபத்து: 27 உடல்கள் மீட்பு; போதைப்பொருள் பரிசோதனையில் மாலுமிகள் சிக்கியதால் பரபரப்பு. ஹமாஸின் அரசியல் தலைமையின் நீண்டகால உறுப்பினரான கலீல் அல் ஹய்யா, அந்த அமைப்பின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராவார். காசாவின் ஷஜாய்யா மாவட்டத்தைச் சேர்ந்த அல் ஹய்யா, ஹமாஸை உருவாக்கிய தலைவர்களின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். அவர் ஹமாஸின் அரசியல் குழுவில் நீண்டகால உறுப்பினராக இருந்ததுடன், அக்குழுவின் கொள்கையை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றினார். காசாவிலும் சர்வதேச அளவிலும் நடந்த பேச்சுவார்த்தைகளில் அந்த அமைப்பின் பிரதான குரலாக விளங்கினார்.
இஸ்ரேலின் ‘மிகவும் தேடப்படும்’ பட்டியலில் உள்ள தலைவர்களில் அல் ஹய்யாவும் ஒருவர். கடந்த பல ஆண்டுகளாக கத்தாரின் தோஹாவில் தங்கியிருந்தார். இஸ்ரேலுடனான மோதல்களின் போது, அவரது வீடுகளும் அலுவலகங்களும் இஸ்ரேலிய படைகளால் பலமுறை குறிவைக்கப்பட்டுள்ளன. 2007ஆம் ஆண்டு நடந்த ஒரு தாக்குதலில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். யஹ்யா சின்வாரின் மரணத்தைத் தொடர்ந்து ஹமாஸ் சந்தித்து வரும் உலகளாவிய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அல் ஹய்யாவின் நியமனம் வந்துள்ளது.


















