பெண் ஒருவரிடமிருந்து 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவை வங்கிக் கணக்கிற்கு பெற்று ஏமாற்றியது
மட்டக்களப்பில் வசிக்கும் பெண் ஒருவரோடு முகநூலில் 3 நாட்களில் நட்புக் கொண்டாடிய வெளிநாட்டு வைத்தியர் என போலியான வைத்தியர் அதிர்ச்சி வைத்தியம் செய்வதாக அனுப்பிய பல இலச்சம் ரூபா பெறுமதியான விலை உயர்ந்த பொருட்களை விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு கொண்டு வந்து தருவதற்கு பல இலச்சம் ரூபா பணம் கோரிய இணைய மோசடி கும்பலிடம் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவை பெண் ஒருவர் இழந்துள்ளதாக மட்டக்களப்புத் ததலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரியவருவதாவது
குறித்த மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் வாழும் பெண் ஒருவரின் முதநூலில் லண்டனில் உள்ள வெள்ளைக்காரரான டான் என்ற வைத்தியர் கடந்த 13 ம் திகதி இணைந்து கொண்டு நண்பர்களாகி இருவரும் சில நாட்கள் முகநூல் ஊடாக கருத்து பரிமாற்றம் செய்து வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குறித்த மட்டக்களப்பில் வசிக்கும் பெண்ணின் கையடக்க தொலைபேசிக்கு கடந்த 16ம் திகதி இலங்கை கட்டுநாயக்கா விமான நிலைய பகுதியில் இயங்கிவரும் வெளிநாடுகளில் இருந்து வரும் பொதிகளை விநியோகிக்கும் கம்பனியின் பணியாளர் என தன்னை அடையாளம் காட்டிய நபர் ஒருவர், லண்டனில் இருந்து வைத்தியர் டான் என்பவர் உங்களுக்கு ஒரு பொதியை அனுப்பியுள்ளார் அதில் பல இலச்சம் ரூபா பெறுமதியான விலை உயர்ந்த பொருட்கள் உள்ளன.அதனை சுங்க திணைக்களத்தில் இருந்து விடுவித்து மட்டக்களப்பிற்கு அனுப்புவதற்கு 87 ஆயிரம் ரூபா பணத்தை உடனே வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு கோரினார்
இதனை நம்பி 1மேற்படி பெண்17 ம் திகதி உடனடியாக 87 ஆயிரம் ரூபா அனுப்பிய பின்னர் மேலும் 3 லட்சம் தேவை என்றதும் 3 லட்சம் ரூபா அனுப்பிய பின்னர் அந்த பொதியை கிளியர் செய்ய மேலும் பணம் கோரியதை அடுத்து அந்த பெண்ணின் தாயார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை அதே வங்கி கணக்கில் வைப்பில் இட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மேலும் ஒரு இலச்சம் ரூபாவை மோசடி கும்பல் கணக்கில் வைப்பில் இட்டபின்னர் அந்த மோசடி கும்பல் மேலும் ஒரு இலச்சத்து 50 ஆயிரம் ரூபாவை கொடுத்தால் பாசல் கிளியராகும் என்றும் அதனை அனுப்புமாறும் வற்புறுத்தியதாகவும் இதனையடுத்து குறித்த பெண் சுதாரித்து கொண்டு மோசடி கும்பலிடம் பணம் தர முடியாது என்ற பின்னர் மீண்டும் அவர்களிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது அது துண்டிக்கப்பட்டுள்ளது என பணத்தை மோசடி கும்பலிடம் இழந்த பெண் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறான மோசடிச் செயற்பாடுகள் பல இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.


















