தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான உரையரங்கு நடைபெறவுள்ளது. இவ்வுரையரங்கு 29ம் திகதி அன்று புதன்கிழமை மாலை 3.00 மணியில் இருந்து மாலை 5.30 மணிவரை கொக்குவில் பொற்பதி வீதியில், பொற்பதிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ள ‘அறிவாலயம்’ மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்வுரையரங்கில் ‘அரசியல் தீர்வு – எதிர்நோக்கும் சவால்கள்’ என்ற தலைப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினதும், தமிழ்த் தேசியப் பேரவையினதும் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்ற உள்ளார். ‘கறுப்பு ஜீலை – கற்க மறந்த பாடங்கள்’ என்ற தலைப்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனும், ‘செம்மணிப் புதைகுழிகள் – உயிர்த்தெழும் சாட்சியங்கள்’ என்ற தலைப்பில் அரசியற் செயற்பாட்டாளர் சுஜீவன் தர்மரட்ணமும் உரையாற்ற உள்ளனர்.















