தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் பிரபல பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு ரஷியா நீதிமன்றம் 12 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. பிரபல போர்ப்ஸ் ரஷியா பத்திரிகையில் அறிவியல் மற்றும் மருத்துவ பிரிவில் தர்யா ஷிபச்சேவா பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். இவர் ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் உக்ரைன் நாட்டுக்கு ரகசியமாக பண உதவி செய்ததாக கூறி, கடந்த 2025 ஆம் ஆண்டு தேசத்துரோக வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு மாஸ்கோ நீதிமன்றத்தில் மூடிய கதவுகளுக்கு பின்னால் ரகசியமாக நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், தர்யா ஷிபச்சேவாவுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.















