நடிகை மோகினி நடிக்கும் ‘கலிபா’ திரைப்படம் ஆகஸ்ட் 20-ந்தேதி வெளியாகிறது. வைசாக் இயக்கத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கலிபா’ திரைப்படத்தில் மோகினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாத் துறையில் 1991-ம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார். திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த அவர், சினிமாவில் இருந்து விலகியிருந்தார். கடந்த 2011-ம் ஆண்டு சுரேஷ் கோபியுடன் ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்குப் பிறகு எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த மோகினி, தற்போது 15 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையுலகிற்குத் திரும்பியுள்ளார். வைசாக் இயக்கத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கலிபா’ திரைப்படத்தில் மோகினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் ‘நூர்ஜஹான்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அவரது பதாகையும் வெளியிட்டுள்ளது. பிருத்விராஜ் – வைசாக் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கலிபா’ திரைப்படம் வரும் 20-ந்தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
















