சூர்யாவின் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படக்குழுவை கார்த்தி பாராட்டினார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் வெற்றி பெற இயக்குநர் வெங்கி அட்லுரி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோயிலில் மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்துள்ளார். இந்நிலையில் படத்தைப் பார்த்த கார்த்தி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் படக்குழுவினரை பாராட்டி பதிவிட்டிருக்கிறார். அவரது பதிவில், “என்ன ஒரு அருமையான எழுத்து வெங்கி அட்லுரி. அழகான கதாபாத்திரங்கள், வியக்க வைக்கும் நடிப்பு, அன்பால் இதயத்தை நிறைத்து, முழுவதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒரு படமாக இருக்கிறது. படம் முழுவதும் புன்னகைக்க வைக்கிறது. மீண்டும் பார்க்க என்னை தூண்டுகிறது. சூர்யாவின் நடிப்பு வாவ். மமிதா, ராதிகா உங்களின் நடிப்பு மனதை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளது. படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருக்கிறார்.
















