நிவின் பாலி, மமிதா பைஜு நடித்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் உலகளவில் 24 நாட்களில் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது. பிரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் 2-ம் பாகத்தை இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கி வந்தார். ஆனால், கதையில் முழுமையான திருப்தி ஏற்படாததால் அப்படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. இப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாகவும், மமிதா பைஜு கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் போர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் ‘பாவனா ஸ்டுடியோஸ்’ சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். நிவின் பாலி , மமிதா பைஜு நடித்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் செப்டம்பர் 4 ஆம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியானது.
இந்த நிலையில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் உலகளவில் 24 நாட்களில் ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
















