இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து, டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானும், இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். நான் வர்த்தகத்தை பயன்படுத்தி இரண்டு சிறந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதலை முடிவுக்கு கொண்டு வந்தேன். எகிப்து மற்றும் எத்தியோப்பியா இடையே நைல் நதியில் அணைக்காக ஏற்பட்ட சண்டையில் எனது தலையீட்டால் இப்போது அமைதி நிலவுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும். அதேபோல், இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும். ஈரான் உச்ச தலைவர் கமேனியை கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது எனது தலையீட்டால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். விரைவாக நல்ல முடிவு எடுத்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்தியா -பாகிஸ்தான் போரை நிறுத்த நான் எடுத்த முயற்சிகளை ஏற்றுக்கொண்டு அந்த தலைவர்கள் செயல்பட்டது போல இஸ்ரேல் மற்றும் ஈரான் தலைவர்களும் போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























