ந.லோகதயாளன்.
புத்தளம் வென்னப்புவப் பகுதியில் 202 மில்லியன் ரூபா பெறுமதியிலான 900 கிலோ கஞ்சா மற்றும் கைத் துப்பாக்கிகள் சகிதம் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடல் வழியாக கடத்தி வரப்பட்ட பெரும் தொகை கஞ்சா வாகனத்தில் தெற்கிற்கு கடத்தப்படவுள்ளதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பெயரில் 900 கிலோ கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியதோடு இவற்றை கடத்த முயன்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரு கைத் துப்பாக்கிகளும. கைத் துப்பாக்கிகளிற்கு பயன்படுத்தப்படும் 40 தோட்டாக்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
























